உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜார்கண்ட் மாநில வாலிபர்களிடம் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

ஜார்கண்ட் மாநில வாலிபர்களிடம் பணம் பறித்த ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

சென்னை:ஜார்கண்ட் மாநில வாலிபர்களிடம், 'ஜி பே' வாயிலாக பணம் பறித்த, ஆட்டோ ஓட்டுநர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வினோத் சிங், 21. இவர், தன் நண்பர்கள் நான்கு பேருடன், கட்டட வேலை செய்ய, நேற்று முன்தினம் ரயிலில் சென்னை வந்தார்.ஐந்து பேரும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, இரண்டு ஆட்டோக்களில் ஏறி மதுரவாயல் சென்றுள்ளனர்.அப்போது, ஆட்டோ ஓட்டுநர்கள், அமைந்தகரை பகுதியில் திடீரென ஆட்டோவை நிறுத்தி, ஜார்கண்ட் மாநில வாலிபர்களை மிரட்டி , 'ஜி பே' வாயிலாக, 3,800 ரூபாய் பறித்து, அவர்களை அங்கேயே இறக்கி விட்டு தப்பினர்.இச்சம்பவம் குறித்து வினோத்சிங், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றப்பிரிவு போலீசார், சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, ஆட்டோ ஓட்டுநர்களான, புதுப்பேட்டையைச் சேர்ந்த விஜய், 21, ஓட்டேரியைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 22 ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, இரண்டு ஆட்டோக்கள் மற்றும் இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை