உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆட்டோவை திருடியவர் கைது

 ஆட்டோவை திருடியவர் கைது

அரும்பாக்கம்: அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் தமிம் அன்சாமி, 30; ஆட்டோ ஓட்டுநர். இவர், கடந்த 12ம் தேதி, வழக்கம் போல் அரும்பாக்கம், சோழன் 2வது தெருவில், ஆட்டோவை நிறுத்தியுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது, ஆட்டோ திருடுபோனது தெரிந்தது. புகாரின்படி, அரும்பாக்கம் போலீசார் விசாரித்து, ஆட்டோவை திருடிய, திருவேற்காட்டைச் சேர்ந்த மணிகண்டன், 30, என்பவரை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !