மேலும் செய்திகள்
ஆக்கிரமிக்கும் டூ - வீலர்கள் ஆவடி சந்தையில் அவதி
03-Jan-2025
ஆவடி, ஆவடி சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஆவடி மாநகராட்சி பகுதிகள், பூந்தமல்லி, திருநின்றவூர் நகராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 33 கிராம பகுதிகளின் பத்திரப்பதிவுகள் நடந்து வருகின்றன.தற்போது, ஆவடி சார் - பதிவாளர் அலுவலகம், பட்டாபிராம், 'மாடர்ன் சிட்டி' எட்டாவது தெருவில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்படுகிறது.சொந்தமாக அலுவலகம் கட்ட, அய்யங்குளம், ஆவடி வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் டவுன் சர்வே எண்: 57/2 ல், 821 சதுர மீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டது. 1.68 கோடி ரூபாயில், தரைத்தளம் மற்றும் முதல் தளம் முறையே 1,625 சதுர அடியில் கட்டப்பட்டது.ஒதுக்கப்பட்ட இடம் முறையாக அளவீடு செய்யாதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பணிகள் துவங்கியதில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. நுழைவாயில் அமைந்துள்ள பகுதியில், 5 அடி இடைவெளியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது.இதனால், அவசர காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற எந்த வழிமுறையும் கட்டடத்தில் ஏற்படுத்தவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. எனவே, சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 821 சதுர மீட்டர் இடத்தை, மீண்டும் மறுஅளவீடு செய்து, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக, சார் - பதிவாளர் அலுவலகம் சுற்றி இருந்த இடம் மறு அளவீடு செய்யப்பட்டது. ஆவடி ஆர்.டி.ஓ., அலுவலகம் உட்பட ஆக்கிரமிப்பில் இருந்த 125 சதுர மீட்டர் இடம் மீட்கப்பட்டு, சுற்றுச்சுவர் மற்றும் 'கேட்' அமைக்கும் பணிகள் நடக்கின்றன. விரைவில் சார் - பதிவாளர் கட்டடம் திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
03-Jan-2025