உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சந்திர கிரஹண நிகழ்வு பள்ளியில் விழிப்புணர்வு

சந்திர கிரஹண நிகழ்வு பள்ளியில் விழிப்புணர்வு

இடைப்பாடி, கொங்கணாபுரம் அருகே கன்னந்தேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், அதன் அறிவியல் மன்றம் சார்பில், சந்திர கிரஹணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அறிவியல் ஆசிரியர் ஜெயக்குமார் தலைமை வகித்து பேசியதாவது:சூரியன், சந்திரன் இடையே பூமி வரும்போது சந்திர கிரஹணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல், சந்திரனில் விழுகிறது. இது ஓர் இயற்கை நிகழ்வு. இன்று இரவு சந்திரன், பூமியின் நிழலால், 85 நிமிடங்களுக்கு முழுமையாக மறைக்கப்படுகிறது. இதனால் முழு சந்திர கிரஹணம் ஏற்படும். பகுதி கிரஹண கட்டத்தில் சந்திரன் மேலும் மறைக்கப்படுவதை காணலாம். முழு கிரஹணத்தின்போது சந்திரன் உண்மையில் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை