உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரும்பாக்கத்தில் ஆயுஷ் மருத்துவமனை

அரும்பாக்கத்தில் ஆயுஷ் மருத்துவமனை

சென்னை :அரும்பாக்கத்தில், 50 படுக்கை வசதிகளுடன்கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை, அண்ணா இந்திய மருத்துவமனை வளாகத்தில் அமைக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ப.செந்தில்குமார் பிறப்பித்த அரசாணை: அரும்பாக்கம் அண்ணா இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை வளாகத்தில், 50 படுக்கைகளுடன் புதிய கட்டடம் அமைக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் சட்டசபையில் அறிவித்தார். அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. இந்திய மருத்துவத் துறை ஆணையர் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்தார். அவற்றை பரிசீலித்து, ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அங்கு அமைக்க ஒப்புதல் அளிக்கப்படுகிறது. அதன்படி, 18.15 கோடி ரூபாயில் அமைய உள்ள மருத்துவமனைக்கு மாநில அரசின் பங்களிப்பாக 6.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய ஆயுஷ் ஆணையத்தின் சார்பில் 11.25 கோடி ரூபாய் பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை