பள்ளிகளுக்கான பேட்மின்டன் தங்கம் வென்ற ஜெயஸ்ரீ, கனிஷ்க்
சென்னை: தென் சென்னை, ஈஞ்சம்பாக்கம் அக்ஷர் சர்வதேச பள்ளி மற்றும் ஆல்பா அகாடமி இணைந்து, பள்ளிகள் இடையிலான பேட்மின்டன் போட்டிகளை நடத்தின. இரு பாலருக்கும் 9, 11, 13, 15, 17 ஆகிய வயது அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டிகளில் 25 பள்ளிகளைச் சேர்ந்த, 120 வீரர்கள் பங்கேற்றனர்.இதில் 9 வயது மகளிர் பிரிவில் ஆதிரா தங்கம் வென்றார். ஸ்ரேயா வெள்ளி வென்றார். ஆண்கள் பிரிவில் விக்டர், மித்ரேன் முறையே தங்கம், வெள்ளி வென்றனர். மகளிர் 11, 13 வயது என, இரு பிரிவிலும் அகிரா தங்கம் வென்றார்.9 வயது பிரிவில் சஞ்சனாவும், 13 வயது பிரிவில் ஷிவானியும் வெள்ளி வென்றனர். ஆண்களில் 11 வயது பிரிவில் ரித்விக், பிரணவ் முறையே தங்கம், வெள்ளி வென்றனர். 13 வயது பிரிவில் தானவ், சோமேஸ்வரன் முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.மகளிர் 15 வயது பிரிவில் ஜெயஸ்ரீ, மகான் தியா ஆகியோர் தங்கம், வெள்ளி வென்றனர். ஆண்கள் பிரிவில் ஹஸ்வத் தங்கமும், பிரசன்னா வெள்ளியும் வென்றனர்.மகளிர் 17 வயது பிரிவில் மீண்டும் களமிறங்கிய ஜெயஸ்ரீ, இப்போட்டியிலும் தங்கம் வென்று அசத்தினார். அதுபோல், ஆண்களுக்கான பிரிவில் கனிஷ்க் தங்கம் வெல்ல, பிரசன்னா வெள்ளி வென்றார்.ஜெயரீ, கனிஷ்க் இருவரும் 15 மற்றும் 17 வயது என, இரு பிரிவில் போட்டியிட்டு, இரு பிரிவிலும் தங்கம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.