உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயணிக்கு உடல்நல பாதிப்பு பஹ்ரைன் விமானம் தாமதம்

பயணிக்கு உடல்நல பாதிப்பு பஹ்ரைன் விமானம் தாமதம்

சென்னை: பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில், பயணிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், பஹ்ரைன் செல்லும் விமானம், ஐந்து மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. மேற்கு ஆசிய நாடான பஹ்ரைனில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் 'கல்ப் ஏர்வேஸ்' விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, 187 பயணியருடன் புறப்பட்டது. அதிகாலை 4:45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டும். ஆனால் பஹ்ரைனில் விமானம் புறப்பட்டு பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப் போது, மும்பை வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்ததால், அவசரமாக அதிகாலை 3:30 மணிக்கு, மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது . அங்கிருந்த ஊழியர்கள், பயணியை மீட்டு மருத்துவ சிகிச்சை வழங்கினர். சிறிது நேரம் கழித்து, 186 பேருடன் மும்பையில் இருந்து காலை 5:30 மணிக்கு புறப்பட்டு, காலை 7:40 மணிக்கு சென்னை வந்தடைந்தது. தினம் அதிகாலை 5:35 மணிக்கு, சென்னையில் இருந்து பஹ்ரைன் புறப்படும் இந்த விமானம், பயணியின் மருத்துவ உதவிக்காக ஐந்து மணி நேரம் தாமதமாக, நேற்று காலை 9:05 மணிக்கு புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி