உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 மீ., அகல சாலையில் வியாபாரம் செய்ய தடை

3 மீ., அகல சாலையில் வியாபாரம் செய்ய தடை

சென்னை, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தலைவராக கொண்டு, நகர விற்பனை குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு, சென்னையில் தெருவோர வியாபாரம் செய்யக்கூடிய இடங்கள், செய்யக்கூடாத இடங்களை கண்டறிந்து, அனுமதி அளித்து வருகிறது.தற்போது வரை, 150 சாலைகளில், தெருவோர வியாபாரத்திற்கு அனுமதி உள்ளது; 188 சாலைகளில் தடை உள்ளது.இந்நிலையில், தெருவோர வியாபார அனுமதி குறித்து மாநகராட்சி வெளியிட்ட வழிகாட்டுதலில் கூறியிருப்பதாவது:வார்டு மக்கள் தொகை அடிப்படையில், 2.50 சதவீதம் தெருவோர வியாபாரத்திற்கு அனுமதி தரப்படும். குறுகலான சாலை, வாகன போக்குவரத்து, பாதசாரிகள் நடமாட்டத்திற்கு இடையூறான பகுதிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், போலீசார் தடை விதிக்கும் பகுதிகள் போன்றவற்றில் அனுமதி கிடையாது.தனியார் இடங்களில், உரிமையாளர் ஒப்புதலுடன் அனுமதிக்கலாம். இருவழி போக்குவரத்து உடைய, 3 மீட்டர் வரை அகலம் உடைய சாலைகளில் அனுமதி இல்லை. ஆனால், வாகனங்கள் அனுமதிக்கப்படாத சாலை என்றால் வியாபாரத்திற்கு அனுமதி உண்டு.மேலும், 3 முதல் 5 மீட்டர் வரை சிறிய அகலம் உடைய சாலைகளில், சாலையோர வியாபாரம் செய்ய அனுமதி இல்லை; ஒருவழி பாதையாக இருந்தால் அனுமதி உண்டு. சாலை 5 மீட்டர் அகலமாக இருந்தால், ஒருபுறமாக அனுமதிக்கப்படும்; 10 மீட்டர் மற்றும் அதற்கு அதிகமாக அகலம் கொண்ட சாலைகளில், இருபுறமும் தெருவோர வியாபாரத்திற்கு அனுமதி உண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை