மேலும் செய்திகள்
மருத்துவமனையில் சோனியா அனுமதி
16-Jun-2025
குன்றத்துார், காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்று, மயங்கி விழுந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்ஷான் ஷாகூர், 20. இவர், குன்றத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.இ., படித்து வந்தார். நேற்று கல்லுாரி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்க, குன்றத்துார் காவல் நிலையம் சென்றவர், விஷம் அருந்தியதாக கூறி மயங்கி விழுந்துள்ளார்.போலீசார் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து போலீசார் கூறியதாவது:ஷான் ஷாகூர், சக மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் கல்லுாரி வகுப்பறையில் இருந்தபடி, வீடியோ காலில் பேசியுள்ளார். பேராசிரியர்கள் கண்டித்தும் கேட்கவில்லை.இதையடுத்து கல்லுாரி நிர்வாகம் அவரை, கடந்த பிப்ரவரியில் வகுப்பில் இருந்து வெளியேற்றி, வீட்டில் இருந்தபடி படித்து தேர்வை எழுதுமாறு அறிவுறுத்தியது. இந்நிலையில், மூன்றாம் ஆண்டு வகுப்பு துவங்கிய நிலையில், நேற்று ஷான் ஷாகூர் கல்லுாரிக்கு வந்துள்ளார். ஆனால், அவரை அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதையடுத்து கல்லுாரி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்க காவல் நிலையம் வந்த அவர், பினாயிலில் எலி மருந்தை கலந்து குடித்ததாக கூறி மயங்கி விழுந்துள்ளார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.இந்நிலையில், உண்மை தன்மை கண்டறிய, தாம்பரம் போலீஸ் கமிஷனரக அதிகாரிகள் குன்றத்துார் காவல் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவான 'ஹார்ட் டிஸ்க்'கை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
16-Jun-2025