உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெங்களூரு சிறுவர்கள் மீட்பு

பெங்களூரு சிறுவர்கள் மீட்பு

கோயம்பேடு:கோயம்பேடு பேருந்து நிலையத்தில், நேற்று அதிகாலை மூன்று சிறுவர்கள் சுற்றித் திரிந்தனர். ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சிறுவர்களை அழைத்து விசாரித்தனர்.இதில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. படிக்காமல் மொபைல் போனில் வீடியோ பார்ப்பதை கண்டித்ததால், பெற்றோரிடம் கோபித்து, பேருந்தில் கோயம்பேடு வந்துள்ளனர். பின், எங்கு செல்வது என தெரியாமல், அங்கும் இங்கும் சுற்றியது தெரியவந்தது.இதையடுத்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, காரில் சென்னை வந்த சிறுவர்களின் பெற்றோரிடம், சிறுவர்களை போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை