உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற பீஹார் நபர் சிக்கினார்

கஞ்சா விற்ற பீஹார் நபர் சிக்கினார்

குன்றத்துார், குன்றத்துார் அடுத்த திருமுடிவாக்கத்தில், வட மாநில தொழிலாளர் ஒருவர், கஞ்சா விற்பனை செய்வதாக புகார் வந்ததை அடுத்து, திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள டீக்கடையில், குன்றத்துார் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.அப்போது, கடையில் பணிபுரிந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் நரேஷ் யாதவ், 38, என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. டீக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், கூடுதல் வருமானத்திற்கு தெரிந்த நபர்களிடமிருந்து, கஞ்சா வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது. ராம் நரேஷ் யாதவை கைது செய்த போலீசார், 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை