மேலும் செய்திகள்
நடிகை சோனா வீட்டில் திருடமுயன்ற இருவர் கைது
06-Oct-2024
மதுரவாயல், வடபழனியைச் சேர்ந்தவர் சிதம்பரம், 34. இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றார்.நேற்று காலை மீண்டும் சென்னை திரும்பினார். மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, கோயம்பேடு நோக்கி சென்றார். மதுரவாயல் மேம்பாலத்தின் கீழே சென்றபோது, லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது, அவரது பைக்கின் கண்ணாடி லாரியில் சிக்கியது.சுதாரித்த சிதம்பரம், பைக்கில் இருந்து தாவி குதித்து உயிர் தப்பினார். லாரி சக்கரத்தில் சிக்கிய பைக், 20 மீட்டர் துாரம் இழுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவத்தில், லாரி சக்கரத்தில் சிக்கி பைக் சேதமடைந்தது.
06-Oct-2024