உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் பேஸ் அன் ஸ்விங் அபாரம்

புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் பேஸ் அன் ஸ்விங் அபாரம்

சென்னை, மார்ச் 16-புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், ஸ்போர்ட்ஸ் லீக் போட்டிகள், சென்னையில் நடந்து வருகின்றன.இதில், ஒன்பது அணிகள், தலா எட்டு போட்டிகள் வீதம், 'லீக்' முறையில் மோதி வருகின்றன. போட்டியில் தேர்வாகும் நான்கு அணிகள், 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.அந்த வகையில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி வளாகத்தில், நேற்று காலை நடந்த லீக் ஆட்டத்தில், பேஸ் அன் ஸ்விங் அகாடமி மற்றும் எட்வர்ட் லெவன்ஸ் சி.சி., அணிகள் எதிர்கொண்டன.'டாஸ்' வென்ற எட்வர்ட் லெவன்ஸ் சி.சி., அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பேஸ் அன் ஸ்விங் அகாடமி, நிர்ணயிக்கப்பட்ட 25 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு, 270 ரன்களை அடித்து அசத்தியது.அணியின் வீரர் ராகேஷ் பார்த்தசாரதி, 40 பந்துகளில் ஐந்து சிக்சர், 13 பவுண்டரிகளுடன், ஆட்டமிழக்காமல் 105 ரன்களை அடித்தார். நித்தின் 56, அனிருத் 49 ரன்கள் அடித்தனர்.அடுத்து பேட்டிங் செய்த எட்வர்ட் லெவன்ஸ் சி.சி., அணி, 23 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 123 ரன்கள் வித்தியாசத்தில், பேஸ் அன் ஸ்விங் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி