உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீர் குழாயில் விரிசல் சீரமைக்கும் வாரியம்

குடிநீர் குழாயில் விரிசல் சீரமைக்கும் வாரியம்

சென்னை, சென்னை, அண்ணாசாலை ஹிக்கின்பாதம்ஸ் அருகே, நான்கு நாட்களுக்கு முன், மின்வாரிய ஊழியர்கள், மின்வடம் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பிரதான குடிநீர் குழாய் சேதமடைந்து, குடிநீர் விணாகி வந்தது. இதை அறிந்த குடிநீர் வாரியத்தினர், விபத்து ஏதும் ஏற்படாத வண்ணம் பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்தனர். சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில், வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணி ஓரிரு நாட்களில் முடியும் என, வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !