உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 10ம் தேதி படகுகள் ஆய்வு

வரும் 10ம் தேதி படகுகள் ஆய்வு

சென்னை, திருவான்மியூர் குப்பம் முதல் எண்ணுார் சிவன்படை குப்பம் வரை, மீனவ கிராமங்களில் படகுகள் கள ஆய்வு வரும் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது.மீன்வளத்துறை உதவி இயக்குனர் திருநாகேஷ்வரன், நாட்டு படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஆய்வின்போது, படகின் பதிவு சான்று, டீசல் மானிய புத்தகம், உரிமயைாளரின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் குழுவினரிடம் காண்பிக்க வேண்டும்.படகில் பதிவெண் தெளிவாக எழுதப்பட வேண்டும். எண் தெரியும் வகையில், ஆய்வாளர்கள் புகைப்படம் எடுக்க ஒத்துழைக்க வேண்டும்.இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகள், ஆய்வின்போது, இயந்திரத்துடன் இருக்க வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தாத படகுகளுக்கு, மானிய விலை டீசல் நிறுத்தப்படும். படகு இல்லை என கருதி பதிவும் ரத்து செய்யப்படும். படகை உரிமையாளர் ஆய்வுக்கு உட்படுத்தாதற்கு, துறை பொறுப்பாகாது. எனவே, வரும் 10ம் தேதி, மீன்பிடி நாட்டு படகுகளை தயார் நிலையில் வைத்து, ஆய்வுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.★★


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !