உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துறைமுக கட்டடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

துறைமுக கட்டடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் நிர்வாக அலுவலருக்கு, இ - மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், சோதனை நடத்தப்பட்டு, வதந்தி என கண்டறியப்பட்டது. சென்னை ரிசர்வ் வங்கி எதிரே, சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தின் அலுவலகம் உள்ளது. இது, ஒன்பது மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கட்டடத்தில் பணிபுரியும் நிர்வாக அலுவலருக்கு, நேற்று மதியம், 12:00 மணிக்கு, இ - மெயில் வந்துள்ளது. அதில், மதியம் 2:15 மணிக்குள் துறைமுகம் பொறுப்பு கழக அலுவலகத்தின் கட்டடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து துறைமுக அதிகாரிகள், பூக்கடை துணை கமிஷனருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். கட்டடத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. மர்ம பொருட்கள் ஏதும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து, துறைமுகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ