உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயில் நிலையத்திற்கு குண்டு மிரட்டல்

ரயில் நிலையத்திற்கு குண்டு மிரட்டல்

வேளச்சேரி,சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர், வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி, இணைப்பை துண்டித்து உள்ளார்.இதையடுத்து, சிந்தாதிரிபேட்டையில் இருந்து வேளச்சேரி நோக்கி வந்த ரயில்கள், பெருங்குடி, தரமணி நிலையங்களில் நிறுத்தப்பட்டன.வேளச்சேரி மற்றும் ரயில்வே போலீசார், மோப்ப நாயுடன் ரயில் நிலையம் முழுதும்இரண்டு மணி நேரம் நடத்திய சோதனையில், வெறும் புரளி என தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரணையில், மொபைல் போன் நம்பரை வைத்து விசாரித்தபோது, அரியலுார் மாவட்டம், திருமேல்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதிவேல், 50, என தெரிந்தது.போலீசார் தொடர்பு கொண்டபோது, அவரது மகள் போனை எடுத்து, அப்பா போதையில் இருந்ததாக கூறியுள்ளார். போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி