உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, மந்தைவெளி, ஆர்.கே.நகர், 4வது தெருவில், செட்டிநாடு ஹரிஷ் வித்யாலயா பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில், பள்ளி அலுவலக இ - மெயிலுக்கு வந்த தகவலில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்ட பின், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், செப், 9, அக், 4, 8ம் தேதிகளில், இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !