மேலும் செய்திகள்
12 நாடுகளின் துாதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
16-Oct-2025
சென்னை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு இ - மெயில் வந்தது. அதில், சென்னை போயஸ்கார்டனில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று இ - மெயிலை பார்த்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கும், வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் முதலில் மயிலாப்பூரில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அவ்வீட்டை அவர் காலி செய்து ஓராண்டிற்கு மேலானதை அறிந்துக் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள், பின் போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், எந்தவித வெடிப் பொருட்களும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Oct-2025