உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் புத்தக கண்காட்சி டிச., 27ல் துவங்கி 17 நாள் நடக்கிறது

சென்னையில் புத்தக கண்காட்சி டிச., 27ல் துவங்கி 17 நாள் நடக்கிறது

சென்னை, தென்னிந்திய புத்தக விற்பணையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான 'பபாசி'யின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, டிச., 27ம் தேதி சென்னையில் துவங்கி ஜன., 12ம் தேதி வரை நடக்கிறது.இது குறித்து பபாசி வெளியிட்ட அறிக்கை:சென்னை புத்தகக் கண்காட்சி - 48, சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் வரும் 27ம் தேதி மாலை 4:30 மணிக்கு துவங்கி ஜன., 12ம் தேதி வரை நடக்கிறது.தமிழக துணை முதல்வர் உதயநிதி, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் உள்ளிட்டோர் துவங்கி வைக்க உள்ளனர்.துவக்க நிகழ்ச்சியில் கருணாநிதி பொற்கிழி விருது, 'பபாசி' விருதுகள் வழங்கப்பட உள்ளது.மொத்தம் 17 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் 900 ஸ்டால்கள் அமைக்கப்படவுள்ளன. வேலை நாட்களில் மதியம் 2:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கும். அரங்குகளில் உள்ள நுால்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.தமிழக கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்கள் உருவாக்கிய கைத்தறிப் பொருட்களை, தமிழக அரசின் பூம்புகார் சார்பில், தமிழக கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 2,000 சதுர அடியில் அரங்கு அமைக்க உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்படும் நுால்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சு, ஓவியப் போட்டிகளும் நடக்க உள்ளது.தமிழ்நாடு பாடநுால் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்ய அகாடமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல்துறை ஆகிய நிறுவனங்களும் பங்கேற்கின்றன.கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில், தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள் பேசுவர். நிறைவுநாள் நிகழ்வில், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்க உள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை