அரசு பஸ்களில் முன்பதிவு பயணம்: 13 பேருக்கு பரிசு
சென்னை, அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு திட்டத்தின் கீழ், 13 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அரசு பேருந்துகளில் பயணிப்பதை ஊக்குவிக்கும் வகையில், போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் மாதம் தோறும் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. மூன்று பேருக்கு தலா 10,000 ரூபாய் வழங்கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், மேலும் 10 பேருக்கு தலா 2,000 ரூபாய் வீதம், ஜூன் முதல் பரிசு வழங்கப்படுகிறது. கடந்த மாதத்துக்கான குலுக்கலில் 13 பேரை, பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேர்வு செய்தார்.