பெண்ணை கட்டாயப்படுத்தி மது, உறவு: காதலன் கைது
திருவான்மியூர், தனியார் விடுதியில் தங்க வைத்து, கட்டாயப்படுத்தி மது அருந்த செய்து உறவு கொண்டதாக காதலி அளித்த புகாரின்படி, காதலனை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.இவரும், நாகர்கோவிலைச் சேர்ந்த ஷாகின், 23, என்பவரும், ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். சில நாட்களுக்குமுன், இருவரும், திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து, மூன்று நாள் தங்கினர். அப்போது, இருவரும் மது அருந்தியதுடன், ஷாகின் பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அப்பெண் கழிப்பறைக்கு சென்று, நண்பர்களுக்கு 'வாட்ஸாப்' வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, அப்பெண்ணை மீட்டனர். அப்பெண் அளித்த புகாரின்படி, ஷாகின் மீது கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்தது, உறவு கொண்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.