உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் கோபுர கலசம் திருடிய சிறுவர்கள் கைது; பெண் மாயம்

கோவில் கோபுர கலசம் திருடிய சிறுவர்கள் கைது; பெண் மாயம்

புளியந்தோப்பு, புளியந்தோப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ், 32. இவரது குடும்பத்தார், புளியந்தோப்பு, கனகராஜ் தோட்டம் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் கட்டி 20 ஆண்டுகளாக பராமரித்து வந்தனர்.இப்பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை இடித்து, புது வீடு கட்டித்தர அரசு ஏற்பாடு செய்து வந்த நிலையில், கடந்த 16ம் தேதி கோவிலையும் இடித்து, அனைத்து பொருட்களையும் எடுத்த நிலையில், கோவில் கலசங்களை மட்டும் அப்படியே வைத்து விட்டு, மறுநாள் எடுக்க திட்டமிட்டிருந்தனர்.இந்த நிலையில் 17ம் தேதி காலை சென்று பார்த்தபோது, ஐந்து கலசங்களும் மாயமாகி இருந்தன. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்தார்.போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 15 வயதுடைய சிறார்கள், கலசங்களை திருடி ஓட்டேரியில் காயலான் கடை நடத்தி வரும் சாரதா, 42, என்பவரிடம் விற்றது தெரிய வந்தது.இதையடுத்து, சிறுவர்கள் இருவரையும் பிடித்த போலீசார், அவர்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். தலைமறைவான சாரதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி