மேலும் செய்திகள்
மருத்துவ கல்லுாரி ஊழியர் நெஞ்சு வலியால் மரணம்
19-Jan-2025
எம்.கே.பி., நகர், வியாசர்பாடி, முல்லை நகர், கோல்டன் காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம், 58; கொத்தனார். இவர், தன் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, வேலை முடித்து மது போதையில் வீடு திரும்பியுள்ளார். தள்ளாடியபடி, இரண்டாவது மாடியில் உள்ள தனது அறைக்கு செல்வதற்காக, படிக்கட்டில் ஏறிய போது, எதிர்பாராதவிதமாக கால் இடறி, கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலையில் அடிபட்டு, மூக்கு, காதில் ரத்தம் வழிந்தது.அதிர்ச்சியடைந்த அவரது மகன் செந்தமிழ்செல்வன், தந்தையை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், விநாயகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார். எம்.கே.பி., நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
19-Jan-2025