உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டுமான இடத்தில் கொத்தனார் பலி

கட்டுமான இடத்தில் கொத்தனார் பலி

அமைந்தகரை,தனியார் பள்ளி கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநில கொத்தனார், மின்சாரம் தாக்கி பலியானார்.மேற்கு வங்க மாநிலம், மணிப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாகயாதார்கோனை, 40; கொத்தனார். இவர், அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.நேற்று முன்தினம் இரவு, பணியில் இருந்தபோது, தவறுதலாக சுவரில் இருந்த மின்சார ஒயரில் கை பட்டு, மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.மயங்கி கிடந்த அவரை, அங்கிருந்த மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 1:50 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை