உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலாறு குழாயில் உடைப்பு 3 மாதமாக வீணாகும் குடிநீர்

பாலாறு குழாயில் உடைப்பு 3 மாதமாக வீணாகும் குடிநீர்

படப்பை, தாம்பரம் மாநகராட்சிக்கு வாலாஜாபாத் அருகே, பாலாற்றில் இருந்து குழாய் வாயிலாக தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.இந்த குழாய், வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், ஒரகடம், செரப்பணஞ்சேரி, படப்பை வழியே தாம்பரம் செல்கிறது.இந்த குழாயில், அழுத்தம் காரணமாக, படப்பை அருகே இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.இதனால், சாலை சேதமாகி குண்டும் குழியுமாக மாறியுள்ளதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.குழாய் உடைப்பை சரிசெய்து, சாலையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை