மேலும் செய்திகள்
'புல்லட்' திருடன் சிக்கினான்
20-May-2025
பெரவள்ளூர், பெரவள்ளூரை சேர்ந்தவர் வினித்குமார், 19; பொறியியல் படித்து வருகிறார். இம்மாதம் 16ம் தேதி இரவு, அவரது புல்லட் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு, அடுத்த நாள் மாலை வந்து பார்த்தபோது, பைக் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து, பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த மோகன்குமார், 23 என்பவர் புல்லட் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். புல்லட் மீட்கப்பட்டது.
20-May-2025