மேலும் செய்திகள்
பெண்கள் முன்னேற்றம்: சமூக சேவர்களுக்கு விருது
01-Jun-2025
சென்னை, தமிழக அரசால், 2024ம் ஆண்டு சுதந்திர தின விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாயிலாக, சிறந்த சமூக சேவகர், சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரொக்க பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன.அதன்படி, 2025ம் ஆண்டிற்கான விருதுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு, பெண்களின் முன்னேற்றத்திற்கு, ஐந்தாண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் போன்ற துறைகளில் தொண்டாற்றும் வகையில் பணியாற்றிய, சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள், https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களை, வரும் 20ம் தேதிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
01-Jun-2025