உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில கேடட் வாள்வீச்சு வீரர்களுக்கு அழைப்பு

மாநில கேடட் வாள்வீச்சு வீரர்களுக்கு அழைப்பு

சென்னை, தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் சார்பில், மாநில அளவிலான 'கேடட்' பிரிவனருக்கான, வாள்வீச்சு தேர்வு போட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை துவங்கி, நாளை மறுநாள் வரை நடக்கிறது.போட்டியில், 17 வயதுக்கு உட்பட்டோரான, 'கேடட்' பிரிவினர் மட்டுமே பங்கேற்க முடியும். முதல் நாளில் சிறுவர்களுக்கும், நாளை மறுநாள் சிறுமியருக்கும் தேர்வுகள் நடக்கின்றன.தேர்வில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறுவர் -- சிறுமியர் பங்கேற்கலாம். தேர்வாகும் இருபாலரிலும் தலா 12 பேர், தமிழக அணியாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜன., 6ம் தேதி துவங்கும், தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர் என, தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை