மரம் விழுந்து கார் சேதம்
அம்பத்துார்: சாலையோரம் இருந்த மரம் விழுந்து கார் சேதமடைந்தது. அம்பத்துார் அருகே பாடிகுப்பம் பிரதான சாலையில், 'டொயோட்டா இனோவா ஹைகிராஸ்' கார், ஒன்று அங்கிருந்த மரத்தின் கீழே நேற்று மாலை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென வேருடன் சரிந்த மரம், கார் மீது விழுந்தது. இதில், காரின் மேல் பகுதி லேசாக சேதமடைந்தது. காரின் உள்ளே இருந்த ஓட்டுநர் நாகலிங்கம், 39, அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். சம்பவத்தின் போது மரத்தின் அருகே சென்ற மின்கம்பி அறுந்தது. பலத்த சத்தத்துடன் மின்மாற்றி வெடித்து, மின் இணைப்பு துண்டித்தது. ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலைய வீரர்களும், அம்பத்துார் மண்டல ஊழியர்களும், மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பியை சீரமைத்தனர்.