மேலும் செய்திகள்
பொது இடத்தில் தகராறு: 6 பேர் கைது
22-Oct-2024
அசோக் நகர், மேற்கு மாம்பலம், விநாயகம் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 43; கார் ஓட்டுனர். இவரது மனைவி தேவி, 35. தம்பதியின் மகன் சுனில்குமார் மற்றும் ஒரு மகள் உள்ளார்.வெங்கடேஷ் நேற்று முன்தினம் மது போதையில், முதல் தளத்திலுள்ள வீட்டிற்கு படிக்கட்டில் ஏறிய போது நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும், வீட்டிற்கு துாக்கிச் சென்ற சிறிது நேரத்தில் இறந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.தகவல் அறிந்து வந்த வெங்கடேஷின் உறவினர்கள், அவரது குடும்பத்தினரே அவரை அடித்துக் கொன்றதாக தகராறு செய்தனர். தகவல் அறிந்து வந்த அசோக் நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்தனர். இதில், தகராறில் ஈடுபட்ட தந்தையை மகனே அடித்து கொன்றது தெரிய வந்தது.விசாரணையில் தெரிய வந்ததாவது:வெங்கடேஷ் மது போதையில், தினமும் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து சென்று மது அருந்தி உள்ளார். இது தொடர்பாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது வெங்கடேஷ் மனைவியை தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் சுனில் குமார் பிளாஸ்டிக் குழாயால் தந்தையின் தலையில் தாக்கியதில், அவர் இறந்தது தெரிய வந்தது.இதையடுத்து, சுனில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
22-Oct-2024