உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் டிரைவருக்கு போக்சோ

கார் டிரைவருக்கு போக்சோ

புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, கடந்த 3ம் தேதி, பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான இளையராஜா, 49, என்பவர், தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரை கண்டதும், இளையராஜா அங்கிருந்து தப்பினார். இது குறித்து புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது.விசாரித்த போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ், இளையராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி