மேலும் செய்திகள்
கதவை மூடிய பஸ் ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது
26-Jun-2025
கோயம்பேடு கோயம்பேடு அருகே காரில் பேருந்து மோதிய விபத்தில், ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்த கார் ஓட்டுநரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 50; அரசு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர். இவர், வேலுாரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்தை இயக்கி வருகிறார். நேற்று நள்ளிரவு வேலுாரில் இருந்து சென்னைக்கு பேருந்தை ஓட்டி வந்தார்.கோயம்பேடு 100 அடி சாலையில், பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீதா ஹோட்டல் எதிரே உள்ள சிக்னல் அருகே திடீரென பேருந்து பழுதாகி நின்றுள்ளது. அப்போது பின்னால் வந்த கார், பேருந்து மீது மோதியுள்ளது. இதில், காரின் முன் பகுதி சேதமடைந்தது.ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், பாஸ்கரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கன்னத்தில் அறைந்து, சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த பாஸ்கரன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசாரின் விசாரணையில், கார் ஓட்டுநரான ஆவடியைச் சேர்ந்த சாமுவேல், 21, என்பவரை கைது செய்தனர். இவர், ஐ.டி., ஊழியர்களுக்காக, தரமணி ஐ.டி., பார்க் முதல் ஆவடி வரை கார் ஓட்டுவது தெரியவந்தது.
26-Jun-2025