உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் கண்ணாடி உடைப்பு போதை ஆசாமிக்கு காப்பு

கார் கண்ணாடி உடைப்பு போதை ஆசாமிக்கு காப்பு

எம்.கே.பி. நகர், வியாசர்பாடி, எம்.கே.பி., நகரைச் சேர்ந்த பிரேம்நாத், 40. இவர், கிண்டியில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணி புரிகிறார்.வழக்கம்போல், இவர் வியாசர்பாடி, அன்னை டிரேடர்ஸ் அருகே, தன் 'ரெனால்ட் டிரிபர்' காரை நேற்று முன்தினம் இரவு நிறுத்தியுள்ளார்.அப்போது, மதுபோதையில் வந்த ஆசாமி ஒருவர், பிரேம்நாத்திடம் வீண் தகராறில் ஈடுபட்டார். தகாத வார்த்தைகளால் பேசி, அங்கிருந்த கட்டையை எடுத்து, காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்.பின், கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இது குறித்து, எம்.கே.பி., நகர் போலீசார் விசாரித்தனர். இதில், வியாசர்பாடி, எம்.கே.பி., நகரைச் சேர்ந்த மணிவண்ணன், 36, என்பது தெரியவந்தது. போலீசார், நேற்று காலை அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை