உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசா கிராண்ட் கட்டும் 10 மாடி ஐ.டி., வளாகம்

காசா கிராண்ட் கட்டும் 10 மாடி ஐ.டி., வளாகம்

சென்னை, டிச. 20- சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை, காசா கிராண்ட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பிரிமியம் மனைகள் வழங்குவதிலும் இந்நிறுவனம் முன்னணியில் உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக பரப்பளவுள்ள அடுக்குமாடி அலுவலக வளாகங்களுக்கான தேவை வெகுவாக அதிகரித்துள்ளதால், காசா கிராண்ட் நிறுவனம், வணிக வளாகங்கள், அடுக்குமாடி அலுவலக வளாகங்கள் கட்டவும் முடிவு செய்துள்ளது.நந்தம்பாக்கம், பல்லாவரம் - துரைபாக்கம் ரேடியல் சாலை, சோழிங்கநல்லுார் ஆகிய இடங்களில், அடுக்குமாடி அலுவலக வளாகங்கள் கட்ட திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது: சோழிங்கநல்லுாரில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில், பிரமாண்டமான அலுவலகவளாகம் கட்ட, காசா கிராண்ட் நிறுவனம்திட்டமிட்டுள்ளது. இதற்காக, பழைய மாமல்ல புரம் சாலையை ஒட்டி,14 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், 6 லட்சம் சதுர அடி பரப்பளவில், 13 மாடிகள் கொண்டதாக, 'பிஸ்பார்க்' என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அலுவலக வளாகம் கட்ட முதலில் திட்டமிடப்பட்டது. அதன் பின், கட்டடத்தின் உயரம், 10 மாடிகளாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், கட்டடத்தின் பரப்பளவு, 13 லட்சம் சதுர அடி வரை அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது. இத்திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் அனுமதி கோரி, காசா கிராண்ட் நிறுவனம்விண்ணப்பித்துள்ளதுஇவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !