உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவன் உதடு சிகிச்சைக்கு பதில் சுன்னத் செய்த டாக்டர் மீது வழக்கு

சிறுவன் உதடு சிகிச்சைக்கு பதில் சுன்னத் செய்த டாக்டர் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு, உதட்டில் கட்டி வந்ததால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை, ஐஸ்ஹவுஸ் டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, பெற்றோர் கடந்த 22ம் தேதி அழைத்து சென்றனர்.அங்கு சிறுவனுக்கு உதட்டில் சிகிச்சை அளிப்பதற்கு பதில், மர்ம உறுப்பில் டாக்டர் ஒவைசி, 33, என்பவர், அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதுகுறித்து, சிறுவனின் பெற்றோர் கேட்டதற்கு 'வேறு ஞாபகத்தில் செய்துவிட்டேன்' என, அலட்சியமாக டாக்டர் பதில் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர், 24ம் தேதி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.மேலும் டாக்டர் மீது சிறுவனின் பெற்றோர் புகாரின் அடிப்படையில் டாக்டர் ஒவைசி மீது, பணியில் அஜாக்கிரதை, மிரட்டல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் சார்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி கூறியதாவது: பதிவு உரிமம் கோரி, ஐஸ்ஹவுஸ் பகுதி மருத்துவமனை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. அப்போது நடத்திய ஆய்வில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன.குறிப்பாக நுண்கிருமி தடுப்பு வசதிகள் அறுவை சிகிச்சை அரங்குகள் பரிந்துரைக்கப்பட்ட வகையில் சுகாதாரமாக இல்லை. போதிய எண்ணிக்கையில் தொழில்நுட்ப வல்லுநர்களும் இல்லை. அவற்றை சரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு, உரிமம் வழங்குவது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.தற்போது, சிறுவனுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடி தொடர்பான சர்ச்சை, அந்த மருத்துவமனையில் எழுந்துள்ளது. அதன்பேரில், விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சண்முகம்
மே 29, 2025 19:51

இவர் சுன்னத் செய்ய மட்டும் தான் படித்தவர்.


புரொடஸ்டர்
மே 29, 2025 19:45

"பலான" மருத்துவரா?


Padmasridharan
மே 29, 2025 09:25

இதுவும் ஒருவிதமான பாலியல் தொல்லைதான்..


ஜலீம்
மே 29, 2025 09:04

நீட் படிச்சி டாக்டராயிருப்பாரோ?


மீனவ நண்பன்
மே 29, 2025 09:51

மதரஸா டாக்டர் ......


N.Purushothaman
மே 29, 2025 08:54

கட்டி இருக்குற உதட்டை பார்க்க சொன்னால் ....என்னவிதமான டாக்டரோ தெரியல ....


மே 29, 2025 08:04

நல்லவேளை "நறுக்" செய்யாமல் விட்டுவிட்டார் சிறுவன் தப்பித்து விட்டான்


vadivelu
மே 29, 2025 07:45

அந்த மனிதர் ... நிபுணர், வரும் நபர்கள் எல்லாம் அதற்குத்தான் என்று நினைத்து விட்டார். நல்ல நேரம், இவரை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்....


ஆரூர் ரங்
மே 29, 2025 07:42

அவருக்கு தெரிந்ததைதானே அவரால் செய்ய முடியும்?


Raj
மே 29, 2025 06:11

இந்த டாக்டரை கவுன்சிலிங் செய்ய வேண்டும். அவரது லைசென்சை கேன்சல் செய்யப்படவேண்டும். நல்லவேளை சுன்னத் செய்தார். சிறுவன் தப்பித்தான்.


S THEYAGARAJAN
மே 29, 2025 06:10

Familiar hospital doing sunneth.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை