உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மசூதி வழியாக ஊர்வலம் 53 பேர் மீது வழக்கு பதிவு

மசூதி வழியாக ஊர்வலம் 53 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை:திருவல்லிக்கேணியில், தடையை மீறி மசூதி வழியாக விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற ஹிந்து முன்னணி நிர்வாகி மணலி மனோகர், நடிகர் கனல்கண்ணன் உட்பட 53 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு ஹிந்து அமைப்பைச் சேர்ந்தோரும், பொதுமக்களும், சென்னையின் பல இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இவற்றை, காவல் துறை உத்தரவின்படி, நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச் சென்று, பட்டினப்பாக்கம் உட்பட நான்கு கடற்கரையில், சிலைகளை கரைத்தனர். இதில், ஹிந்து முன்னணி அமைப்பு நிர்வாகி மணலி மனோகர், நடிகர் கனல்கண்ணன் உள்ளிட்ட 53 பேர், போலீசார் அனுமதித்த வழியில் செல்லாமல், தடையை மீறி திருவல்லிக்கேணியில் மசூதி வழியாக, விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து, பின் நள்ளிரவு விடுவித்தனர். இந்நிலையில், தடையை மீறியதற்காக 53 பேர் மீதும் இரு பிரிவுகளின் கீழ், ஜாம்பஜார் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை