ஏ.டி.எம்.,மில் கொள்ளை கோர்ட் உத்தரவால் வழக்கு பதிவு
ராயபுரம்: மெர்க்கன்டைல் ஏ.டி.எம்., மிஷினில் 4 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், நீதிமன்ற உத்தரவை அடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ., சாலையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. அதன் வங்கி கட்டுப்பாட்டில், 12 ஏ.டி.எம்.,க்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், ராயபுரம், சூரியநாராயணன் சாலையில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில், கடந்த 2024 ஏப்., 11ம் தேதி, மர்ம நபர்கள் சாவியை பயன்படுத்தி ஏ.டி.எம்., மிஷினை திறந்து, 4.12 லட்சம் ரூபாயை திருடி சென்றது தெரியவந்தது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தருமாறு வங்கி நிர்வாகத்தினர், 16வது பெருநகர குற்றவியல் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ராயபுரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.