மேலும் செய்திகள்
சுரங்கபாலத்தில் சிக்கிய மாநகர பஸ்
31-Oct-2024
6 சுரங்கப்பாதைகள் மூடல்
16-Oct-2024
ஆலந்தூர், கத்திப்பாரா சுரங்கப்பாதையில் சிக்கிய சிமென்ட் கலவை லாரி, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு மீட்கப்பட்டது.சென்னை, முட்டுக்காடில் கட்டுமான பணிக்காக சிமென்ட் கலவை இறக்கி விட்டு, ஆந்திர மாநில கலவை லாரி நேற்று முன்தினம் ஆலந்துார் வழியாக கோயம்பேடு நோக்கி செல்ல முயன்றது. லாரியை மான்சிங், 46 என்பவர் ஒட்டி சென்றார்.கிண்டி, கத்திப்பாரா சுரங்கப்பாதை வழியாக அண்ணா சாலையை அடைய முயன்றது. ஆனால், சுரங்கப்பாதையில், மேம்பாலத்தின் அடியில் லாரி முழுவதுமாக சிக்கியது. தகவல் அறிந்த பரங்கிமலை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரி டயரில் இருந்த காற்றை குறைத்து வாகனத்தை வெளியே எடுக்க முயன்றனர். அந்தப் பகுதியில் இருவழிச் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, ஒரு வழியில் மட்டும் வானங்கள் அனுமதிக்கப்பட்டன. இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் வாகனம் மீட்கப்பட்டது.கத்திப்பாரா சுரங்கப்பாலத்தின் அடியில், அடிக்கடி இந்த நிகழ்வு நடப்பதால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, சுரங்கப்பாதையின் முன் அதன் உயரத்திற்கு தடுப்பு கம்பி அமைத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
31-Oct-2024
16-Oct-2024