உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி

 மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி

சென்னை: சைபர் குற்றங்களை தடுப் பது மற்றும் அதனை எதிர்கொள்வது தொடர்பாக, தேசிய அளவில் நடத்தப்பட்ட, 'தமிழக காவல் ஹேக்கத்தான்' போட்டியில், மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் அணி, 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை வென்றது. சவால்கள் நிறைந்த சைபர் குற்றங்களை தடுப்பது மற்றும் அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்து, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகம் சார்பில், தேசிய அளவிலான, 'தமிழக காவல் ஹேக்கத்தான்' போட்டி நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து, மாணவர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என, 346 பேர் வெவ்வேறு அணிகளாக பங்கேற்றனர். இறுதிச் சுற்றில், 52 அணிகள் பங்கேற்றன. இதில், மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் மின்னணு மற்றும் பரிவர்த்தனைகள் பாதுகாப்புக்கான சமூக அணி, முதல் பரிசு பெற்று, 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை பெற்றது. பரிசளிக்கும் நிகழ்ச்சி, அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலக வளாகத்தில், நேற்று நடந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, சிறப்பு விருந்தினரான, பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பாலநாகதேவி, ரொக்கப் பரிசுக்கான காசோலையை வழங்கினார். சிறந்த 10 அணிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ