உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைவர், து.தலைவர் செக் பவர் பறிப்பு

தலைவர், து.தலைவர் செக் பவர் பறிப்பு

சேலையூர், அக். 1-சேலையூர் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சி தலைவராக வேல்முருகன், துணை தலைவராக புருஷோத்தம்மன் ஆகியோர் உள்ளனர். இருவரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள்.தலைவர், துணைத் தலைவர் இடையே நிலவும் கோஷ்டி பூசலால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது.அதில், ஊழியர்களுக்கு மாதாந்திர ஊதியம், அடிப்படை பணிகளுக்கு நிதி விடுவிக்கப்படாத நிலைமை, குடிநீர், தெரு விளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.மேலும், தலைவர் மற்றும் துணை தலைவர் இடையே ஒருமித்த கருத்து இல்லாததாலும், ஊராட்சி நிர்வாக சூழ்நிலையை கருத்தில் கொண்டும், ஊராட்சி கணக்குகளின் பணப் பரிவர்த்தனையை, தலைவர் மற்றும் துணை தலைவர் மேற்கொள்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது.ஊராட்சிகளில் திட்ட பணிக்கான வரவு - செலவுகளை, பரங்கிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ