உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் மின்சார பஸ்கள் இயக்க 20 இடங்களில் சார்ஜிங் மையங்கள்

தனியார் மின்சார பஸ்கள் இயக்க 20 இடங்களில் சார்ஜிங் மையங்கள்

சென்னை, தனியார் மின்சார பேருந்துகள் இயக்க வசதியாக, சென்னையில், 20 பணிமனைகளில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், ஐந்து இடங்களில் பணிகள் முடியும் நிலையில் உள்ளன.சென்னை மாநகரின் எல்லை விரிவடைந்துள்ளதால், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக, தனியார் பங்களிப்போடு, 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, 500 தனியார் மின்சார பேருந்துகளை இயக்க, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஓ.எச்.எம்., குளோபல் மொபிலிடி நிறுவனத்துடன், கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.பேருந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து பேருந்துகளின் பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, இந்த பேருந்துகளை இயக்குவதற்காக, பணிமனைகளில் தனியார் நிறுவனம் சார்பில், சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:தனியார் மின்சார பஸ்களை இயக்க வசதியாக, மாநகர போக்குவரத்து கழகத்தில், 20 பணிமனைகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய பணிமனைகளில், சார்ஜிங் மைய பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. தனியார் மின்சார பஸ்களின் சேவை துவங்கும்போது, சார்ஜிங் மையங்களும் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை