மேலும் செய்திகள்
ஹிட்டர்ஸ் அணி கிரிக்கெட்டில் வெற்றி
23-May-2025
சென்னை, ஒயிட் ஜெர்சி கிரிக்கெட் அகாடமி சார்பில், 'குய்க்கர் கிரிக்கெட்' தொடரின் நான்காவது சீசன், திருநின்றவூரில் உள்ள ஒயிட் ஜெர்சி மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டிகள் லீக் கம் நாக் - அவுட் முறையில் நடக்கிறது. நேற்றுமுன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில், சென்னை இந்தியன்ஸ் அணி, டர்போ அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் தடுமாற, சுரேஷ் 1(7), ராஜெஸ் 10(17) என சரித்தனர். எதிர் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 65 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும், சென்னை இந்தியன்ஸ் அணி இழந்தது. டர்போ அணியின் ராஜன், நான்கு; கிருஷ்ணகுமார் மூன்று விக்கெட்டுகளை வீழத்தினர். அடுத்து ஆடிய டர்போ அணியினரின் அபார பேட்டிங் செய்தனர். இந்த அணி, 9.5 ஓவர்களில், 66 ரன்களை குவித்து, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. டர்போ அணிக்காக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய ராஜன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடரின் அடுத்த அரையிறுதி போட்டி, வரும் 22ம் தேதி நடக்க உள்ளது.**
23-May-2025