உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 14 ரயில் நிலையங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதி

14 ரயில் நிலையங்களில் அதிநவீன பாதுகாப்பு வசதி

பெரம்பூர் : ''இந்த ஆண்டு இறுதிக்குள், தெற்கு ரயில்வேயின் முக்கிய 14 ரயில் நிலையங்களில், ஒருங்கிணைந்த அதிநவீன பாதுகாப்பு வசதி செய்யப்படும்'' என, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக்கிஷன் அறிவித்தார். ரயில்வே பாதுகாப்புப் படையின் 27வது ஆண்டு துவக்க விழா அணிவகுப்பு, பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நேற்று நடந்தது. அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தீபக்கிஷன் பேசியதாவது:ரயில்வே உடைமைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவசர காலங்களில் மற்ற படையினருடன் சேர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ரயில் பயணத்தின் போது மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் செல்ல ஆர்.பி.எப்., பிரிவு பெரும் பங்கு வகிக்கிறது.

இயற்கை பேரிடர், தேர்தல், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு போன்றவற்றில் ஆர்.பி.எப்., பிரிவினர் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தெற்கு ரயில்வேயின் முக்கியமான 14 ரயில் நிலையங்களை ஒருங்கிணைத்து, 29 கோடி ரூபாய் செலவில், அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், ஆர்.பி.எப்., போலீசார் செய்து காட்டிய வீர சாகச நிகழ்ச்சிகள், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. முதன்மை பாதுகாப்பு அதிகாரி டாக்கா ,சென்னை கோட்ட ஆணையர் காந்தி உள்ளிட்ட அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ