உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கான்ட்ராக்டரிடம் லஞ்சம் கேட்ட சென்னை தி.மு.க., கவுன்சிலர் நீக்கம்

கான்ட்ராக்டரிடம் லஞ்சம் கேட்ட சென்னை தி.மு.க., கவுன்சிலர் நீக்கம்

சென்னை: அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரரிடம், பணம் கேட்டு மிரட்டிய சென்னை தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.சென்னை, மதுரவாயல் வி.ஜி.பி., அமுதா நகரில், கூவம் கரையோரத்தில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணி, 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தத்தை, தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் நாகராஜ் எடுத்துள்ளார்.மாநகராட்சியின் 144வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்டாலின், தன் ஆதரவாளர்களுடன் அமுதா நகருக்கு சமீபத்தில் சென்று, இப்பணிகள் நடக்க வேண்டுமானால், தனக்கு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என, மிரட்டியதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் மற்றும் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் சார்பில் கவுன்சிலர் மீது, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், பணம் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கவுன்சிலர் ஸ்டாலினை, கட்சியலிருந்து நீக்கி, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 144 வட்ட செயலரும், கவுன்சிலருமான ஸ்டாலின், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சுந்தர்
அக் 08, 2024 07:05

அப்படி பார்த்தால் 80% கவுன்சிலர்களை நீக்க வேண்டி இருக்கும்


ஆரூர் ரங்
அக் 07, 2024 21:44

தெரிஞ்சுதான் அந்தப் பெயரை வைத்தார்களோ? ( ரஷ்யப் பெயர்?)


Jysenn
அக் 07, 2024 19:50

"கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ..." ரொம்பதான் தமாஷ் செய்கிறார் துரை முருகன். கவுன்சிலர் பெயர் சூப்பர்


கபிலவத்சன்
அக் 07, 2024 17:12

வெறும் நீக்கம் தானா? கவுன்சிலர் பதவியை பறிச்சு உள்ளே தள்ளியிருக்க வாணாமா? கோர்ட், போலீசெல்லாம் தண்டம்.


nagendhiran
அக் 07, 2024 16:54

அதான்டா திமுக? மாட்டியதால் நீங்கம்? மாட்டலைனா பங்கு? அதான்டா திராவிட மாடல்? இப்படிதான்"கஷ்ட பட்டு திருட்டுதனமா ரயிலில் வந்து பாதி தமிழகத்தை ஆட்டையை போட்டதா?


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 07, 2024 08:23

நீக்கம் என்பதெல்லாம் நம்ம தலைமேல கலகத்துல ஒரு வாரத்துக்குத்தான். அதுக்குள்ள அடிச்சதை கோணிச்சாக்கு மூட்டையில எடுத்துக்கிட்டு நேரா சித்தரஞ்சன் சாலைக்கு போயி செட்டில் பண்ணிட்டா, அடுத்த வாரமே நம்ம ஜிப் வாயர் லார்டு முருகர் "தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டதால் மீண்டும் கலகத்தில் இணைக்கப் படுகிறார் என்று அறிக்கை வெளியிட்டு விடுவார்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 07, 2024 08:19

நீக்கப்பட்டதாக சொல்லப்படும் உறுப்பினர் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவராம். ஆனால் செய்தியோ கோவை என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.


VENKATASUBRAMANIAN
அக் 07, 2024 08:12

இவர் சரியாக கட்டிங் கொடுக்கவில்லை போலும்