உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில சீனியர் வாள்வீச்சு சென்னை வீரர்கள் பங்கேற்பு

மாநில சீனியர் வாள்வீச்சு சென்னை வீரர்கள் பங்கேற்பு

சென்னை: இந்திய வாள்வீச்சு சங்கம் ஆதரவில், தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் சார்பில், மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, கன்னியாகுமரியில் நாளை துவங்கி, நாளை மறுநாள் வரை நடக்கிறது. எப்பீ, பாயில், சேபர் ஆகிய மூன்று வகைகளில், பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். சென்னையில் இருந்து, தலா 12 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறுவோர், அடுத்தடுத்து நடக்கும் தேசிய, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முடியும் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி