உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குறைந்த நேரத்தில் கியூப் சுழற்றி சென்னை மாணவர் உலக சாதனை

குறைந்த நேரத்தில் கியூப் சுழற்றி சென்னை மாணவர் உலக சாதனை

சென்னை: சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சித்தார்த், மிகக்குறைந்த நேரத்தில், 'கியூப்' சுழற்றி, மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். சென்னை அண்ணா நகர் பப்ளிக் ஸ்கூலில், 10ம் வகுப்பு படிக்கும் சித்தார்த், அகில இந்திய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயல்பாட்டு கழக கியூபிங் பயிற்சியாளர் ஆனந்த் ராஜேந்திரனிடம், கடந்த மூன்றாண்டுகளாக பயிற்சி பெறுகிறார். இவர் கடந்த 2023ல், கண்களைக் கட்டியபடி, மரத்தால் ஆன 4 - 4 ஸ்னேக் கியூபை, 8.59 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டார். இந்த சாதனையை, இன்ஜினியஸ் சார்ம் வேல்டு ரெக்காட்ஸ், ஆசிய புக் ஆப்ரெக்கார்ட்ஸ், இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இன்டர்நேஷனல் அச்சீவர்ஸ் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றின் சார்பில், உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது. இதற்காக, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்றார். கடந்தாண்டு நடந்த சாதனை நிகழ்வில், 3 - 3 எனும் அனகோண்டா கியூபை, 8.5 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டு, அடுத்த உலக சாதனையை படைத்தார். இந்தாண்டு, பல்வேறு உலக சாதனை நிறுவனங்களின் சார்பில் நடத்தப்பட்ட கியூபிக் போட்டியில் பங்கேற்றார். அப்போது, 13 திருக்குறள்களை சொல்லியபடி, வலது கையால் பட்டாம்பூச்சி சீப்பை சுழற்றியபடியே, இடது கையால் ஐந்து 2 - 2 கியூப்களை, 1 நிமிடம் 14 வினாடிகளில் சுழற்றி தீர்வு கண்டு, புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில், மூ ன்று உலக சாதனைகளை படைத்துள்ள சித்தார்த்தை, பல்வேறு விளையாட்டு அமைப்புகள் பாராட்டியுள்ளன. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், தமிழக கவர்னர் ரவி உள்ளிட்டோரும் பாராட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை