உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை மாணவர்கள் குங்பூவில் பதக்க வேட்டை

சென்னை மாணவர்கள் குங்பூவில் பதக்க வேட்டை

சென்னை, சென்னை ஐ.சி.எப்.,பில், மாநில தற்காப்பு கலை போட்டிகள் நடந்தன. அதில், சென்னை குங் பூ சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் அபாரமாக விளையாடினர். அவர்களில் 10 பேர் தங்கம், மூன்று பேர் வெள்ளி, ஒருவர் வெண்கலம் என, அதிக பதக்கங்களை கைப்பற்றினர்.அதில், 12 -, 13 வயது பிரிவில், கட்டா, வெப்பன் கட்டா விளையாட்டில் ராஜராஜன் இரண்டு தங்கம் வென்றார். 16 - 17 வயது பிரிவில், கட்டா, வெப்பன் கட்டாவில் சிவகுமார் இரண்டு தங்கம் வென்றார். கட்டா, வெப்பன் கட்டா, சண்டை நிகழ்வுகளில் 6 - 7 வயது பிரிவில் பங்கேற்ற துரோணா சாய் அஜய், மூன்றிலும் தங்கப்பதக்கங்களை பெற்றார். மேலும், பல்வேறு வயது பிரிவுகளில் பங்கேற்ற ஜஷ்விகா போலங்கி தங்கம்; அத்விக், அனன்யா சுந்தரேசன், போதினா ரோஹன், துரை வி மேகநாதன் ஆகியோர் வெள்ளி; விஜய் ஆதித்தன் வெண்கல பதக்கங்களை வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி