உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்கலை நீச்சல் போட்டி சென்னை அணிக்கு வெள்ளி

பல்கலை நீச்சல் போட்டி சென்னை அணிக்கு வெள்ளி

சென்னை, இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலை நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நடந்து வருகின்றன. 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.ஆண்களுக்கான, 4 x 200 மீ., 'பிரீஸ்டைல் ரிலே'வில், பெங்களூரு ஜெயின் பல்கலை தங்கமும், சண்டிகர் பல்கலை வெள்ளியும், கோல்கட்டா ஆதம்ஸ் பல்கலை வெண்கலமும் வென்றன.அதே பிரிவில், பெண்கள் பிரிவில், ஜெயின் பல்கலை, சண்டிகர் பல்கலை மற்றும் புனேவின் சாவித்ரிபாய் பூலே புனே பல்கலை அணிகள், முறையே முதல் மூன்று இடங்களை கைப்பற்றின.அதேபோல், 4 x 100 மீ.,'ப்ரீஸ்டைல் கலப்பு ரிலே'வில், பெங்களூரு ஜெயின் பல்கலை முதலிடத்தையும், சென்னை பல்கலை இரண்டாம் இடத்தையும், சண்டிகர் பல்கலை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ