உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ.20.17 கோடி மறுசீரமைப்பு

சேத்துப்பட்டு பசுமை பூங்கா ரூ.20.17 கோடி மறுசீரமைப்பு

சேத்துப்பட்டு, சேத்துப்பட்டு பசுமை பூங்காவை, புதிய வசதிகளுடன், 20.17 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.தமிழக மீன்வள மேம்பாட்டுக் கழகத்தின் கீழ், சேத்துப்பட்டு பசுமை பூங்கா பராமரிக்கப்படுகிறது. இப்பூங்கா வளாகத்தில், படகு சவாரி மட்டுமின்றி, சிறுவர்கள் விளையாட்டு பகுதி, மீன் கண்காட்சி, '3டி' திரையரங்கம், மின்பிடி துாண்டில் வளாகம், ஹோட்டல்கள் அமைக்கப்பட்டன. தாவரங்கள் நிறைந்த அழகிய நீர்த்தேக்கமாகவும் காட்சியளித்தது. படிப்படியாக களையிழந்து வெறிச்சோடிய பூங்காவை, மேம்படுத்த கோரிக்கை வலுத்தது.இதையடுத்து, பூங்கா மேம்படுத்த, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் திட்டமிட்டது. அதன்படி, பூங்காவை பல்வேறு வசதிகளுடன், 20.17 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகளுக்கான, பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்வில், மீன்வளம் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''சேத்துப்பட்டு பசுமை பூங்கா மேம்படுத்தும் பணிகள், டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும். பணிகளால், நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு எந்த இடையூறும் இருக்காது. கொளத்துாரில் மீன் திருவிழாவை நடத்துவதற்கு ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.

மறுசீரமைப்பு பணிகள்

பரப்பளவு: 15.70 ஏக்கர்திட்ட மதிப்பு: ரூ.20.17 கோடி சிறப்பு அம்சங்கள்: நவீன நுழைவாயில், பார்வையாளர்கள் பாலம், துாண்டில் மேடைகள், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டு பகுதி, யோகா பகுதி, அலங்கார விளக்குகள், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், படகு தளம், இசை நீரூற்று, விளையாட்டு அரங்கம், நடைபாதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ